Thursday, December 11, 2008

பிடித்த paadal

வசந்தகாலக் கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்.

kadhal

இது ஒரு மூன்று எழுத்து மந்திரம்
இந்த மந்திரம் அறியாதவன் பாதி மனிதன்.
காதல் அலைகள் போல......
கரைகள் விரும்பாவிடினும்
அலைகள் வேகம் என்றும் குறைவதில்லை..
கரையும் அலையும் கடலுக்கு அழகு.
ஆணும் பெண்ணும் காதலுக்கு அழகு.

Wednesday, December 10, 2008

ஒரு மழைக்காலம்

ஒரு மழைகால மாலைநேரம்...
பூப்பூவாய் தூறல்.....
உனக்காக காத்து இருந்தேன்
நீ நடந்து வந்தாய் வெகு தொலைவில்..
உனக்குள் ஏதோ அவசரம் தெரிந்தது
அருகினில் வந்தாய் நான் வேறெங்கோ வெறித்தேன்..
உன் கண்களை சந்திக்கும் வலிமை எனக்கு இல்லை.
நீ தொலைவுகளில் இருந்தால் காதலிக்கிறேன்...
அருகினில் வந்தால் பதபதபுடன் மனம்.
சொல்ல வந்தது மெல்ல மறந்து போகிறது..
மீண்டும் முயற்சிக்கிறேன் நாளை..

Monday, December 8, 2008

mumbai

அரபிக் கடலின் அழகே
நீ என்றுமே தூங்கியது இல்லை..
உனக்கு இரவுகளே இல்லை...
உன்னை துப்பாக்கி குண்டுகள் துளைத்த போது
தீவீரவாதி நினைத்தான் நீ நிற்கமுடியாது என்று.
நீ ஒரு பீனிக்ஸ் பறவை என அவனுக்கு தெரியாது.
நீ தனிமரம் அல்ல...இந்திய ஆலமரத்தின் விழுது.
இந்த ஆலமரத்துக்கு ஆயுதம் ஏந்தவும் தெரியும்..
இந்தியா யாரையும் அழிப்பது இல்லை...
அழிக்க வருவோரின் வேரை கூறு போட தயங்குவடுமில்ல..
எதிரிகளே...புறவாசலில் கோழை போல வரமால்...
நேருக்கு நேர் நிற்க தயாரா???

Sunday, December 7, 2008

கடலூர்

மழையே......
பெற்ற தாயின் நீர்க்குடம் உடைந்த போது
கண் விழித்தோம்.
நீ எங்களுக்கு வளர்த்த தாய்.
உன் நீர்க்குடம் உடைந்த போது
கண்ணை மூடினோம்.

Monday, December 1, 2008

desam

எங்கே போகும் இந்த தேசம்.பாதை முழுதும் பாறைகள்.பூக்களை தேடி தேடி ரத்தம் சிந்தியது தேகம்.மனிதனை மனிதனே கொல்லும் அவலம்.மிருகம் கூட தன் இனத்தை எப்போதும் கொல்லுவதில்லை.மகாத்மாவே மீண்டும் ஒரு முறை நீ பிறக்கவேண்டும் இந்த மண்ணில்.அகிம்சையும் உன்னுடன் சேர்ந்தே மறைந்து போனது.அதனால் நீ மீண்டும் அவதாரம் செய்ய வேண்டும்.